திருச்சி எம்பவர் டிரஸ்ட் மற்றும் ஹேபிடாட் பார் ஹீமானிட்டி இந்தியா இணைந்து கர்ப்பிணி பெண்கள் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது!
இந்நிகழ்வில் 17 கர்ப்பிணி பயனாளிகள் பயனடைந்தனர் அவர்களுக்கு அரிசி உட்பட 15 வகையான சமையல் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இருதயபுரத்தில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் 12.02.21 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருச்சி ஆத்மா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் கீதா மற்றும் இருதயபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி மருத்துவர் கல்பனா திலகம் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக களைந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மருத்துவர் கீதா பேசுகையில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களும் உடல் நலத்தையும் மன நலத்தையும் சிறப்பாக பேணி காக்க வேண்டும், தேவையற்ற சிந்தனைகளையும் பிரச்சனைகளையும் கலந்து மனதை நேர்மறை எண்ணங்களுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். தங்களுக்கு தாங்க முடியாத கவலையும், பிரச்சனையும் மனதில் குழப்பமும் இருந்தால் மருத்துவமனையில் மனநல ஆலோசனை பெறுவது அவசியம் என்று வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாது கர்ப்பிணி பெண்ணின் ஆரோக்கியத்திில் குழந்தையின் ஆரோக்கியம் அடங்கியுள்ளது என்றும், சந்தோஷமான சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான காய்கறிகள் பருப்பு வகைகள் மற்றும் கீரை வகைகளை உட்கொள்வது அவசியம் என்றார்.
மருத்துவர் கல்பனா திலகம் பேசுகையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் நிறைந்து உள்ளதாகவும் கர்ப்பிணிப் பெண்கள் தங்களது மனநிலை பிரச்சனைகளை மருத்துவருடன் கூறி ஒவ்வொருவரும் ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் தங்களது நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 17 கர்ப்பிணி பெண்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்பெற்றமைக்கு நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மூத்த செவிலியர்கள் உமா மகேஸ்வரி, கிரேசஸி மற்றும் ஏனைய செவிலியர்கள் பங்கு பெற்றனர்.மேலும் சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் அருண் எம்பவர் டிரஸ்ட் பணியாளர் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்பவர் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முனைவர் கனிமொழி மற்றும் ஹேபிடாட் பார் ஹூமானிட்டி இந்தியா அமைப்பின் பன்னாட்டு தன்னார்வ துறை இயக்குனர் அன்னா சார்லி ஆகிய இருவரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments