விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும் மற்றும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தின் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று சமயபுரம் சுங்கவரி சாவடியை (Toll Plaza) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர். சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments