கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம் நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள காய்கறி, மருந்தகம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா வழங்கினார்.
அங்கு வந்த மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக தினமும் வெளியே வர வேண்டாம் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று நீங்களே வெளியே வருவதை குறைத்து கொண்டால் நோய் பரவலை தடுக்கலாம், தமிழக அரசின் முயற்சிகளுக்கு நாம் துணை நிற்போம் என்று தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments