திருச்சி உறையூர் வடக்கு வண்டிக்காரத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது வீட்டு அருகே கரும்புச் சாறு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகம்பாள் (36). முருகேசன் கரும்புச்சாறு கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் முருகேசன், லோகம்பாளிடம் கடையில் சிறிது நேரம் வியாபாரத்தை பார்க்குமாறு கூறிவிட்டு வீட்டுக்கு சென்றார். அதன்படி லோகம்பாள் வியாபாரத்தை கவனித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகம்பாளின் சுடிதார் துப்பட்டா கரும்புச்சாறு பிழியும் எந்திரத்தில் சிக்கியது.
இதனால் அந்த எந்திரத்தில் இருந்து விடுபட முயற்சி செய்து அவர் சத்தம் போட்டார். அருகிலிருந்தவர்கள் அங்கு வருவதற்குள் அந்த எந்திரத்தில் சுடிதார் துப்பட்டா இழுக்கப்பட்டதால் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் லோகம்பாளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 28 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          


Comments