திருச்சி அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கங்காதேவி நேற்று முன்தினம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் எரிப்பதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். சிறுமி கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திய பொழுது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்காரப் பையன் செந்திலை காதலித்து வந்ததாகவும் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளதும் தெரியவந்துள்ளது. கங்காதேவி செந்திலுடன் பழகியதால் அவருடைய அப்பா கண்டித்துள்ளார் அவர் உனக்கு அண்ணன் முறை வேண்டும் என்று. செந்தில் தன்னுடைய கையில் G.S என பச்சை குத்தியும், சிகரெட்டால் கைகளில் சூடு வைத்துக்கொண்டும் இருந்துள்ளான். இதனிடையே செந்தில், கங்கா தேவியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். கோபமடைந்த சிறுமி உடனே “நான் என்ன செய்கிறேன் என்று பாரு” என தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக செந்தில் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் என போலீசார் தகவல்!!
Comments