திருச்சி மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை முகாம் தொடர்ந்து 3வது வாரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டத்தில்
நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன்படி திருச்சி மாவட்ட அனைத்து மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இன்று கதர் ஆடை அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments