Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவு பயன்பாட்டுக்கு வந்தது ரோபோ!! அசத்திய திருச்சி பொறியாளர்கள்!!

திருச்சி தனியார் நிறுவனம் தயாரித்துள்ள, ‘ரோபோ’க்களை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.திருச்சியில், ‘புரோபெல்லர்(Propeller) டெக்னாலஜிஸ்’ என்ற ரோபோட்டிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ட்ரோன், ரோபோ போன்றவற்றை வடிவமைத்து தயாரித்து வரும் இந்நிறுவனம், ஷாபி (ZAFI) என்ற பெயரில் ரோபோக்கள் தயாரித்து வருகிறது. இதை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த முன்வந்தால், இலவசமாக வழங்க தயார் என, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, முகமது ஆஷிக் ரகுமான் தெரிவித்தார்.

சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இத்தகைய வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்த நிலையில் 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் பல்லாயிரம் பேர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ட்ரோன், ரோபோ ஆகியவற்றை தயாரித்து வரும் ‘புரோபெல்லர்(Propeller) டெக்னாலஜிஸ் என்ற ரோபோட்டிக் நிறுவனம் ஷாபி மற்றும் ஷாபி மெடிக் என்ற இருவகையான ரோபோக்களை தயாரித்து வருகிறது. மேலும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது ஆஷிக் ரகுமான் கூறியதாவது, மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்றகாக செயல்படக் கூடிய வகையில் ஷாபியும், அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய வகையில் ஷாபி மெடிக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் ஷாபி மருத்துவர்களுக்கு உதவியாகவும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து உணவு போன்றவற்றை வழங்க பயன்படுத்தலாம். இது மொபைல் மூலமாகவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் மூலமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுளது என கூறினார். அதேபோல, ஷாபி மெடிக் ரோபோ ரோவர் வகையைச் சேர்ந்தவை.

இது 1 கி.மீ வரை சுமார் 20 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறனுடையது. இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், சேனிடைசர் தெளிக்கவும் பயன்படுத்தலாம். கையிருப்பாக ஷாபி ரகத்தில் 9 ரோபோக்களும், ஷாபி மெடிக் ரகத்தில் ஒன்றும் உள்ளது. அரசு அங்கீகரித்தால் இதனை இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம். ஏற்கெனவே இந்த வகை ரோபாக்கள் சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பயனடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிறுவனத்தின் பொறியாளர் குரு அவர்கள் கூறியபோது “இந்த ரோபோக்களின் மூலம் மனிதர்கள் நேரடியாக நோயாளிகளை தொடர்பு கொள்வது தவிர்க்கப்படும்.ஏனென்றால் நோயாளியிடம் இருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்து கொண்டு இந்த ரோபோக்களை இயக்க முடியும்.தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் இருப்பவர்களுக்கு காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்களை கூட கொண்டு செல்லக் கூடிய வகையில் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் 20 கிலோ வரையில் எடுத்துச்செல்லப்படும். நோயாளிகளின் முழு விவரமும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்”என்றார்

இந்நிலையில் தயாரித்த ரோபோக்கள் இன்று திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவிற்கு பயன்பாட்டிற்கு வந்தது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *