மார்ச் மாதம் கொரோனா ஆரம்பமாகும் போது திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மையத்தையும் கொரோனா மையமாக 600 படுக்கை வசதியுடன் மாற்றியுள்ளனர்.
திருச்சி பொறுத்தவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2651 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 60 பேர் இறந்தும் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக 700 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதில் 685 பேர் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. எனவே ஏற்கனவே சிகிச்சை பெறும் 685 பேரில் 7 பேரை தனியார் விடுதியில் தனிமைப்படுத்த அழைத்துச் செல்கின்றனர்.
கடந்த 45 நாட்களாக 100க்கும் அதிகமான பாதிப்புகள் தினமும் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களே சிகிச்சைக்காக இடம் பிடிக்கக் கூடிய நிலை உருவாகிவிட்டது. அரசு மருத்துவமனை ஹவுஸ்ஃபுல் ஆகாமல் இருப்பதற்கு தினமும் ஒரு நூறு பேரையாவது டிஸ்சார்ஜ் செய்தால் புதிதாக நோய் தொற்று பாதிப்பவர்கள் சிகிச்சை பெறும் நிலை வந்து விட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments