தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில், மேலும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்துள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி இருப்பதால், தமிழகத்தில் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 63 வது வார்டில் ஒரு சிறுமிக்கு டெங்கு பாதிப்பு இருந்ததை தொடர்ந்து, அந்தப் பகுதியில் மாநகராட்சி துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலைவலி, உடல்வலி, வயிற்று வலி, வாந்தி, குமட்டல், காய்ச்சல் போன்றவை டெங்கு அறிகுறிகளாக உள்ளன. டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பழைய கட்டிடத்தில் தேவைக்கேற்ப தனி வார்டுகள் உருவாக்கப்பட உள்ளது. டெங்கு அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 29 வார்டு பகுதியில் சமீபத்தில் இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments