நாடு முழுவதும் உள்ள 41 படைகலன் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படைகளின் தொழிற்சாலையை சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மத்திய அரசு படைகலன் தொழிற்சாலை வாரியத்தை 7ஆக கார்ப்பரேஷன் களாக மாற்றி அரசாணை தன்னிச்சையாக வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து நாட்டில் உள்ள படைகலன் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் தலைமையில் தொழிற்சாலை நுழைவாயில் முன்பு தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பணியின் போது கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் மற்றொரு நிறுவனமான எச்.ஏ.பி.பியில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments