Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

Cycle For Change விருது பட்டியலில் திருச்சி இடம் பெறவில்லை

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்த Cycle For Change  விருதுப்பட்டியலில் திருச்சி மாவட்டம்  இடம் பெறவில்லை. திருச்சியில் மிதிவண்டி பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் திருச்சி மாநகராட்சியில் சைக்கிளிங் பயிற்சி செய்வதற்காக மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது கிடையாது. விருது பட்டியலில் 11 நகரங்கள் இடம்பெற்றன. கடந்த வியாழன்று இணைய வழியில் விருதுகளும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 

பெங்களூரில் புவனேஸ்வரி சண்டிகர் போன்ற 11 நகரங்கள் இடம்பெற்றன. எனவே நகரங்களில் அதிக அளவு சைக்கிள் ஓட்டும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் திருச்சியில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே பணி நடைபெற்று இருகிறது. பாரதிதாசன் சாலை மற்றும் கரூர் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கு தனியாக  சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் பூர்ணிமா குமார் கூறுகையில்… நான் சைக்கிள் பயிற்சி பிரதான சாலைகளில் தொடர்ந்து இதனை செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். மாநகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக மிதிவண்டிகளை பயன்படுத்துவதற்கான தனி பாதை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்னும் சில குடியிருப்புவாசிகள் இதுபோன்ற காலகட்டங்களில் இப்போட்டிக்குறித்து அமைச்சகத்தை விமர்சித்துள்ளனர்.

சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைச்சகம் சாலைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் பல்வேறு நகரங்களில் சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *