திருச்சி நவலூர் குட்டப்பட்டு அடைக்கல அன்னை மற்றும் அரவாயி அம்மன் கோயில் பக்தர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 350 காளையர்களும் பங்கேற்றன. இதில் 56 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் 41 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 15 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 பேர் மாடுபிடி வீரர்கள், 17 பேர் மாட்டின் உரிமையாளர்கள், எட்டு பேர் பார்வையாளர்கள்,விழா கமிட்டி குழுவை சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குட்டபட்டு ஜல்லிகட்டில் பங்கேற்ற மதுரை ஆளவந்தான் பகுதியை சேர்ந்த அருண் பிரதாப் என்பவரின் காளை ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்து விட்டு ஓடிவரும் போது முறையாக தடுப்பு வேலிகளை அமைக்காததால் 20 அடி ஆழமுள்ள வாய்க்காலுக்குள் பாய்ந்தது. ஏராளமான பார்வையாளர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தும் மரத்தின் மேல் இருந்தவர்களும், இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வாய்க்காலுக்குள் இறங்கி காளை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் காளை உயிரிழந்து விட்டதை தெரிந்து நூற்றுக்கணக்கானோர் அந்த பகுதியில் பெரும் சோகத்துடன் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தனர். பின்னர் கால்நடைத்துறை மருத்துவர் உடனடியாக அந்த இடத்திலேயே காளையை பிரேத பரிசோதனை செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments