திருச்சி மாநகரில் பிரதான சாலைகளில் நாள்தோறும்ஆடு, மாடு மற்றும் குதிரைகள் அதிகளவில் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து கால்நடைகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி தற்போது சுணக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அதிக அளவில் மாடுகள் மற்றும் குதிரைகள் திரிந்து வருகின்றன. இதனால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதேபோல் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திரியும் குதிரைகள் திடீரென ஓடுவதால் பயணிகள் அச்சமடைந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் பிரதான சாலைகளில் கால்நடைகள் அதிகளவு தெரிவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதோடு, விபத்தும் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments