திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள வாழக்கட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் ராஜகுரு (50) திருமணம் ஆன இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் உதவி நூலகராக பணியாற்றிய வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த நிலையில் இன்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜகுரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜகுரு சாவில் சந்தேகம் உள்ளதாக அப்பகுதி சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் ராஜகுரு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments