திருச்சி ராம்ஜி நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் காமராஜ். இன்று அதிகாலை 2.30 மணியளவில் இவரது வீட்டில் அரிவாள் மற்றும் கற்களை கொண்டு 3 நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டில் இருந்த கார், இருசக்கர வாகனம், வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஆகியவை சேதமடைந்தன.
மேலும் வீட்டை உடைக்க முடியாததால் யாருக்கும் காயமில்லை. வழக்கறிஞர் காமராஜ் வீட்டை கொலை முயற்சியோடு தாக்கி சேதப்படுத்திய புங்கனூரை சேர்ந்த ராஜா, அஜீத், மணி உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் காமராஜ் புகார் மனு அளித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments