திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தின் பங்கு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் பங்கு திருவிழாவில் தினமும் ஜெபமும் சிறிய தேர்பவனி நடைபெறும். தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், மரியன்னை படம் பொறித்த கொடியை 60 அடி கொடி மரத்தில் ஏற்றி வைத்தார்.
முன்னதாக மேலப்புதூர் கான்வென்ட் ரோடு வழியாக கொடி பவனி நடைபெற்றது. அதன் பின்பு ஆயரின் கூட்டு பாடல் திருப்பலியும் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா வருகிற எட்டாம் தேதி தேர் பவனி நடைபெற உள்ளது. தினமும் நவநாள் ஜெபம் முடிந்த பிறகு சிறிய தேர் பவனியும் நடைபெறும்.
இன்று நடைபெற்ற திருக் கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை சவரிராஜ், உதவி பங்கு தந்தை, பங்கு பேராலய உறுப்பினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments