திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 காவல் நிலையங்களில் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவின் பேரில் உதவி ஆணையர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது அரசு மருத்துவமனை காவல் நிலையம், தில்லை நகர் காவல் நிலையத்தில் இருந்து திமுகவினர் பணபட்டுவாடா செய்த பண கவர்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தொடர்ந்து விசாரணை நடத்தினார். காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர், எழுத்தர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்விவகாரத்தில் பண பட்டுவாடா செய்த திமுக வழக்கறிஞர் மணிவண்ணன் பாரதி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடியாக மறுநாளே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டது. நேரடியாக தேர்தல் ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிட்டதால் திருச்சி மாநகர காவல் ஆணையர் இருந்த லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் திருச்சி பொன்மலை பகுதியில் உதவி ஆணையராக பணிபுரிந்த தமிழ்மாறன் பணியின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தேர்தல் ஆணையம் இவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments