திருச்சி நடுகுஜிலி தெருவில் ஸ்ரீ கோல்டு பைனான்ஸ் அடகு கடையின் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் ஸ்ரீதர், அவரது தம்பி ஸ்ரீ ராம் கடந்த ஆறு வருடங்களாக நகை அடகு மற்றும் பைனான்ஸ் செய்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் 08-03-22ம்தேதி அடகு கடையை மூடிவிட்டு சென்றனர். வழக்கம் போல் நேற்று காலை 09-03-22ம் கடையை திறக்க வந்த போது முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த அடகு பிடித்த நகைகள் 22 கிராம் மற்றும் 150 கிராம் வெள்ளி திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுக்குறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO
Comments