Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தை தொடங்கிய திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம்(NIT)

மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தை தொடங்கிய திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம்
 
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் உலக காடுகள் தினத்தை முன்னிட்டு 0.58 ஏக்கர் அளவில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிகழ்வை நேற்றையதினம் நிறுவனத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் மற்றும் பதிவாளர் அறிவழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வளாகத்தின் உள்ளே இந்த காடு உருவாக்கும் திட்டத்திற்காக இந்நிறுவனத்தின்  தோட்டக்கலை ஆலோசனைக்குழு ஸ்ரீரங்கத்தில் உள்ள மியாவாக்கி வனப் பகுதியை பார்வையிட்டு மேலும் அதை எவ்வாறு உருவாக்க வேண்டுமென்ற திட்டங்களை திருச்சி மாநகராட்சியின் உதவியோடு செயல்படுத்தி உள்ளனர்.

இந்த மியோவாக்கி காடுகளில் 60 முதல் 70 மரபு சார்ந்த மரங்களும் பத்திற்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் ,பூச்செடிகள் நடப்பட்டுள்ளது.  மண்ணை வளப்படுத்தும் முதல் முயற்சியாக வளாகத்திலேயே சேகரிக்கப்பட்ட காய்ந்த சருகுகளை கொண்டு மண்ணின் வளத்தை மேம்படுத்துதியுள்ளனர். அதுமட்டுமின்றி 84 டன் உரங்களை திருச்சி மாநகராட்சி வழங்கியுள்ளது. மேலும் வளாகத்தின் உள்ளே  20 டன் உரங்களை சேகரித்து வைத்திருந்து அதையும் மியாவாக்கி காடு உருவாக்கம் திட்டத்திற்காக பயன்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து பேசிய நிறுவனத்தின் இயக்குனர்    பல்வேறு காடுகளைப் வளாகத்தை  சுற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம் .இவை அமைப்பதன் மூலம் இயற்கையோடு இணைந்த வாழ்வை நிறுவனத்தில் உள்ள மாணவர்களும் பேராசிரியர்களும் பெறுவர். அதுமட்டுமின்றி புத்துணர்ச்சியோடு இங்கு நடந்து செல்வதற்கு இக்காடுகள் உதவும் என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *