BNI Emperor சார்பாக குடியரசு தினம், பொங்கல் கொண்டாட்டம் மற்றும் குடும்ப விழா RBS ROYALE PALM Morais City இல் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக BNI Emperor president வாசுதேவன் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார் பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைக்கப்பட்டது. மாட்டு வண்டி சவாரி, குதிரை சவாரி, உறியடி, கிராமிய ஆடல் பாடல்கள் என கலை கட்டியது. ஆண்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

பொங்கல் திருவிழா நடைபெறும் இடத்தில் அந்த காலத்து தின்பண்டங்கள் மற்றும் ஆட்டம் பாட்டம் என கலை கட்டியது. இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான போட்டிகள், தம்பதிகளுக்கான Fashion show மற்றும் நடன போட்டிகள் நடைபெற்றது. இதனை ஜெகன் தொகுத்து வழங்கினார்.

இதில் அனைவருக்கும் மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியை president Vasudevan, vice president பரந்தாமன் secretary treasure ராமகிருஷ்ணன் மற்றும் chairman பாலா, ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

13 Jun, 2025
388
29 January, 2025










Comments