தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் ஜிஎம் ஈஸ்வர ராவ், உத்தரவின் பேரில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் Dr. அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில்
திருச்சி RPF இன்ஸ்பெக்டர் K. P. செபாஸ்டியன் தலைமையில் M.குருநாதன், துணை உதவி ஆய்வாளர், K.லட்சுமணன், துணை உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நேற்று (29.01.2025) இரவு திருச்சி ஜங்ஷன் வந்தடைந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் வண்டியில் இரண்டு ரயில் பயணிகள் தங்களது சூட்கே சுகளை மாற்றி எடுத்து சென்று விட்டதாகவும், அதில் ஒரு பயணியின் சூட்கேசில் சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் பட்டு புடவைகள் இருப்பதாகவும் வந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர்
இன்று (30.01.2025) குறிப்பிட்ட இரண்டு பயணிகளான சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் காசிநாதன் மற்றும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ராஜகோபாலன் ஆகியோரை கண்டறிந்து திருச்சி RPF நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் பட்டு புடவைகளையும் மீட்டு உரிய நபரான L.ராஜகோபாலனிடம் முறையாக ஒப்படைத்தனர்.
காசிநாதனிடம் அவரது சூட்கேஸ் மற்றும் உடமைகள் ஒப்படைக்கப்பட்டது. மேற்படி திருச்சிராப்பள்ளி இரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் துரிதமான நடவடிக்கையை பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments