நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்படடனர்.
Advertisement
இந்நிலையில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதன் ஒருபகுதியாக திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்த பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
Advertisement
இதனையொடுத்து காவல் துறை அனுமதியின்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட தலைவர் கலில் உள்பட 50 பேர் மீது கொரோனா ஊரடங்கு சட்டத்தை மீறி ஓன்று கூடி நோய் பரவலுக்கு காரணமாக செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments