Friday, September 5, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு பல்கலைகழக அளவில் நாட்டுநலப்பணி திட்ட விருதுகள்

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சீரிய நோக்கங்களில் ஒன்றான மாணவர் இயக்கங்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அண்ணா பல்கலைக்கழகம் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவிலான நாட்டுநலப்பணி திட்ட விருதுகளை அறிவித்து சிறப்பு செய்துள்ளது. இவ்விருதிற்காக தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

வல்லுனர் குழுவின் பரிசீலனை மற்றும் பரிந்துரையின் படி திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அமைப்பிற்கு இவ்வாண்டு மூன்று விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கார்த்திகேயன் திறம்பட நாட்டு நலப்பணி திட்ட அமைப்பினை 
வழி நடத்தியதற்காக  2019 – 2020 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருதினை வழங்கி கௌவுரவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 2019- 20 ஆம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் விருதுகளை மூன்றாம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பயிலும் யு.சிபி பிரகதீஷ் மற்றும் மூன்றாம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறையில் பயிலும் ஜனனி  ஆகியோருக்கு வழங்கி பெருமை அடைய செய்துள்ளது.

சாரநாதன் பொறியியல் கல்லூரியை பெருமைப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்  இருவருக்கும் பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *