Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி எஸ் ஆர்எம் மருத்துவக் கல்லூரியில், நவராத்திரி மெடிக்கல் கொலு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் , எஸ் ஆர் எம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளது .

இதில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்களின் சற்று மாறுபட்ட முயற்சியாக நவராத்திரி கொலு என்பது பொம்மைகளின் அணிவகுப்பு என்பதிலிருந்து சற்று மாறுபட்டு மனித உடலில் உள்ள வேறுபட்ட அவயங்களின் தொகுப்பு அவற்றின் அமைப்பு வேலை ஆகியவற்றை பல்வேறு தலைப்புகளின் கீழ் குழுவாக அலங்கரித்துள்ளனர் .இந்த கொலுவை அலங்கரிப்பதோடு அறிவியல் அறிவையும் பார்ப்போருக்கு புகட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ கொலுவில் எலும்பு மற்றும் தசை , நரம்பு மண்டலம் , நுரையீரல், இருதயம், வயிறு மற்றும் குடல் , சிறுநீரகம் சார்ந்தவைகள், இனப்பெருக்கம் சார்ந்த வகைகள் என ஏழு அமைப்புகளின் கீழ் இந்த கொலு அமைந்துள்ளது ஒவ்வொரு குழுவிலும் மனித உடல் அமைப்பில் வடிவமைப்பு அதில் ஏற்படும் பிரச்சனைகள் அதை எவ்வாறு இயற்கை உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குணப்படுத்துவது என்பதனை விளக்கம் வகையில் மருத்துவ மாணவ மாணவிகளின் கொலு அமைந்துள்ளது

இதுகுறித்து திருச்சி எஸ்ஆர் எம் வளாக மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி செய்தியாளர்களிடம் கூறியதாவது…. இந்த மருத்துவக் கொலுவினை பள்ளி மாணவ மாணவிகளும் கண்டு களிக்கும் வகையில் இக் கொலு கண்காட்சி 28 ஆம் தேதி முதல் வரும் அக்டோபர் மாதம் 6 ம் தேதி மாலை 3 மணி வரை மருத்துவ கொலு கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மருத்துவ கொலு என்பது நம் நாட்டிலே முதல்முறையாக இங்கு தான் உள்ளது. இந்த கொலு அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்துள்ள செயலாகும் . இதனை காண்போர் நம் மனித உடலில் ஒவ்வொரு அவயத்தின் செயல் திறனையும் அறிந்து கொள்ளலாம் என்றார்.

மருத்துவமனை வளாகத்திலும் ஆன்மீகம் தொடர்பான நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின் போது எஸ் ஆர் எம் திருச்சி வளாக இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *