திருச்சி தில்லைநகர் புதுமாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மலா்விழி மீரா என்பவர் தனது உறவினரான பாலமுரளிகார்த்திக் என்பவருடன் மலர்விழி மீரா பழகி வந்ததாகவும், அதனை அவரது தாய் உறவை துண்டிக்குபடி அறிவுறுத்தியதன் பேரில் மலர்விழி மீரா எதிரியிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த பாலமுரளி கார்த்திக் கடந்த 14.06.2019-ஆம் தேதியன்று தென்னூர் புதுமாரியம்மன் கோயில் பொதுகழிப்பிடம் அருகில் மேற்படி மலர்விழி மீராவை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக அவரது தாய் செல்வி என்பவர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல்நிலையத்தில் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொண்டு எதிரியை 15.06.2019–ஆம் தேதி கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.இவ்வழக்கின் புலன் விசாரணை முடிந்து எதிரி மீது கடந்த 30.07.2019-ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் திருச்சிராப்பள்ளி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி P.தங்கவேலு விசாரணையை முடித்து, இன்று 21.10.2021-ஆம் தேதி எதிரி பாலமுரளி கார்த்திக் என்பவருக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்படி ஆயுள் சிறைதண்டனையும், தலா ரூ.5,00,000/- அபராதம் விதித்தும் (இந்த தொகையை புகார்தாரர் செல்வியிடம் இழப்பீடாக வழங்ககோரியும்), கட்ட தவறினால் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்புரை வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை
பெற்று தந்த தில்லைநகர் காவல் ஆய்வாளா் மற்றும் காவலர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெகுவாக பாரட்டினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments