Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிய திருச்சி சூரியன் எப்எம்

கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் முன்னெச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருக்க வேண்டும் என்பதற்காக திருச்சி சூரியன் எஃப்எம் நிகழ்ச்சியில் தினம்தோறும் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதனுடைய எஸ்எம்எஸ் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  ஏற்படுத்த உள்ளனர்.

SMS S-soap நன்றாக கைகளை சுத்தம் செய்தல் வேண்டும், M-mask முக கவசம், S-Socail distance சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து செய்திடுங்கள் என்று சுருக்கமாக SMS என்ற வார்த்தை மூலம் தினந்தோரும் நிகழ்ச்சிகளின் வழியே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.

அடுத்த முயற்சியாக திருச்சியில் உள்ள கிராமங்களுக்கு இரண்டு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு புது முயற்சியை எஸ்எம்எஸ் கொரானா விழிப்புணர்வு வாகனம் என்ற பெயரில் இன்றைய தினம் தொடங்கியுள்ளனர். தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இந்த வாகனமானது இன்று முதல் ஜூலை 3ஆம் தேதி வரை திருச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்.

இந்த வாகனத்தில் சிறப்பம்சமாக SMS வலியுறுத்தும் புகைப்படங்களோடு, வானொலி நிலையத்தில் பணியாற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சினிமா பிரபலங்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் ஆடியோ பதிவு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது ஒலிபரப்பப்படும்.  

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணி தொடங்கிய நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி சூரியன் எஃப்எம் வானொலி நிலையத்தின் நிலைய பொறுப்பாளர் பிரதீப் மற்றும் மூத்த திட்ட தயாரிப்பாளர் அபிராமி, சூரியன் எப்எம் இல் பணியாற்றும் தொகுப்பாளர்கள் மற்றும் காவிரி மருத்துவமனை, சிட்டி யூனியன் பைனான்ஸ் சார்பில் நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *