திருச்சி துறையூர் கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவன் மா.வெ.மகாபதஞ்சலி என்ற மாணவன் தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கும் கடிதம் எமுதியுள்ளார்.
இதில் இப்பள்ளியிற்கு கணிணி எழுத்துப் பயிற்சி, நடனம், இசை, யோகா, தற்காப்பு பயிற்சியுடன், ஸ்மார்ட் வகுப்பறை உடன் தனியார் பள்ளியிற்கு இணையாக தரம் உயர்த்த 2018 – 2019 ல் கிராமசபையில் தீர்மானம் இயற்றிய தீர்மான எண்களை கோடிட்டி கடிதம் எழுதி இருக்கிறார்.
இந்த வயதில் கிராம சபை கூட்டத்திற்க்கு சென்ற மாணவன் மகாபதஞ்சலி , நித்தியன் நிறைவேற்றிய தீர்மானத்தை , தற்பொழுது செயல்படுத்த முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய அனுப்பி உள்ளார்.
மேலும் அரசுப்பள்ளி, நம்பள்ளி, அரசுப் பள்ளியில் பயின்று ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி சிவம், உள்பட பல ஆட்சியர், ஆசிரியர், மருத்துவர் மற்றும் பல உயர்ந்த பதவியை அடைந்துள்ளனர் என்று தன்னுடைய ( அரசு ) பள்ளியின் பெருமையை பறைசாற்றி பதாகை வைத்து உள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW
Comments