Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியிலிருந்து திருப்பதி செல்ல 7 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்

தமிழக முதலமைச்சர் வழிக்காட்டுதலின் படி சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் சென்னையிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவினை பொது மக்களின் பேராதரவோடு மிக சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்கி வருகிறது.

இச்சுற்றுலாவினை தமிழகத்தில் உள்ள மிக முக்கிய நகரங்களில் இருந்து இயக்க முடிவு செய்து இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக திருச்சியிலிருந்து தினசரி திருப்பதி சுற்றுலா வருகின்ற 08.08.2022 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும், இருவேளை சைவ உணவு. குளிர்சாதன சொகுசு பேருந்து வசதி மற்றும் சிறப்பு தரிசன டிக்கட்டுகள் உட்பட கட்டணமாக பெரியவர்கள் ரூ.3,300/ சிரியவர்கள் ரூ.3,000/ (4 வயதிலிருந்து 10 வயதிற்கு உட்பட்டோர்க்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 இச்சுற்றுலாவில்பயணம் செய்ய 7 நாட்களுக்கு முன்னரே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இச்சுற்றுலா குறித்த மேலும் விவரங்களுக்கு திருச்சி தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் 0431-2414346 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண். 9176995862 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.comல் சுற்றுலா பற்றிய விவரங்கள் மற்றும் முன்பதிவையும் செய்து கொள்ளலாம் என சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்துரி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *