Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் UPSC தேர்வு விபரம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO-2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination (02.07.2023) அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆறு தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வினை 2286 பேர் எழுதவுள்ளனர். மேற்படி தேர்வு பணிக்கென 6 தேர்வுக்கூட மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இப்போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள இரண்டு இயங்குக்குழுக்கள் (Mobile Unit) அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் துணை வட்டாட்சியர் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர் ஒருவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையத்தை ஆய்வு செய்யும் பொருட்டு வட்டாட்சியர் நிலையில் ஆய்வு அலுவலர் (Inspection Officer) ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்வு மையத்தில் காவல்துறை மூலம் பாதுகாப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையத்தில் கண்காணித்திட, 3 ஆண் காவலர்கள், மற்றும் 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு அறைகளில் தேர்வு எழுதும் ஒவ்வொறு 24 நபர்களுக்கு இரண்டு அறைக் கண்காணிப்பாளர்கள் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எவ்வித மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை என தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *