கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு உதவ திருச்சி VDart நிறுவனம் 5 டன் அரிசியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் வழங்கியது. மிக குறுகிய காலத்தில் ஆயிரம் சிறிய பாக்கெட்டுகளை 5 கிலோ வீதம் 5 டன் அரிசியை பேக் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் VDart நிறுவனம் வழங்கிய 5 டன் அரிசி வாகனத்தை அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் VDart குழும தலைமை செயல் அதிகாரி சிட்அகமத் உள்ளிட்ட ஊழியர்கள் உடன் இருந்தனர்.
Comments