திருச்சி, கொட்டப்பட்டு, இந்திராநகர் வசித்து வரும் திருசக்கரவர்த்தி என்பவர் காவல்துறையில் காவலராக பணியாற்றி கடந்த 1994 ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றுள்ளார்.திருசக்ரவர்த்தி திருச்சி மாவட்டம், குண்டூரில் கடந்த 2006ல் இரண்டு வீட்டு மனைகள் வாங்கியுள்ளார்.மேற்படி மனையில் வீடு கட்ட முடிவு செய்று அதற்கு கடன் வாங்க வசதியாக தனிப்பட்டா கோரி, அரசாங்க கட்டணத்தை கட்டி திருச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே மாதம் 2007ல் மனு செய்துள்ளார்.
கடந்த 16.10.2007ம்தேதி வட்டாசியர் அவவலகத்தில் டெபிடி இன்ஸ்பெக்டர் ஆப் சர்வே கணேசமூர்த்தி என்பவரை சந்தித்து பட்டா தொடர்பாக கேட்டபோது, கணேசமூர்த்தி பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய ரூ.1000/- லஞ்சமாக கேட்டுள்ளார். வஞ்சம் கொடுக்க விரும்பாத திருசக்கரவர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பிடிபட்டார்.
கணேசமூர்தியின் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 25.11.2022ந்தேதி ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 7ன் கீழ் ஓராண்டு சிறை தண்டனையும், அபராதம் ரூ.30,000/- ‘அபராதம்’ கட்ட தவறினால் 6. மாத சிறைத்தண்டனையும், ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 13(2} உடல் இணைந்த 15{7(d)ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ.10,000/- அபராதம் கட்ட தவறினால் 6 மாத சிறைத்தண்டனையும் மேற்படி தண்டனைகான ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறியுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments