கடந்த ஐந்து நாட்களாக வயநாட்டில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி உதவிட திருச்சி விஷன் சார்பாக கேட்டிருந்தோம். பல்வேறு தரப்பிலிருந்தும் நண்பர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் கிடைக்கப்பெற்றது.
அதனை மினி லாரியில் ஏற்றி இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கொடியசைத்து திருச்சியிலிருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் வாகனத்தை அனுப்பி வைத்தார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பெற்றோர் உற்றார், உறவினர்களை இழந்த குழந்தைகளுக்காக உதவிய
அனைத்து நல் உள்ளங்களுக்கும் திருச்சி விஷன் சார்பாக இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments