Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Citizen Voice

3ம் ஆண்டில் திருச்சி விஷன் – வாழ்த்துக்களும் ஆலோசனைகளும்

“திருச்சி மக்களின் ஆதரவோடு இரண்டு ஆண்டுகளை கடந்து வரும் நவ. 1ம் தேதி  மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திருச்சி விஷன் இணையத்தளம். எங்களுக்கான வாழ்த்துக்கள் மற்றும் நாங்கள் மென்மேலும் உயர உங்களது ஆலோசனைகள் என்ன?” 

என்று மக்களிடம் கருத்து கேட்டிருந்தோம். அதற்கு மக்கள் அளித்த வாழ்த்துக்களும் ஆலோசனைகளும். 

ந. சாதிக் அலி

சமூக ஆர்வலர் 

மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் திருச்சி விஷன் இணையதளத்திற்கு 57 வது வார்டு மக்கள் சார்பாக நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் மேலும் தங்களுடைய செய்திகள் உடனுக்குடன் மக்கள் நலன் சார்ந்த செய்திகளை வெளியிடுவதில் நம்பர்-1 ஆக   திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

மேலும் வார்டு பிரச்சினைகளையும் கையில் எடுத்து அந்த அந்த வார்டில் உள்ள பிரச்சினைகளை வெளியிட்டு மக்களுக்கு பயனுள்ளதாக மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..

..

கிரிஸ்ட்டி 

திருச்சி விஷன் நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்.கடந்த ஒரு வருடமாக இந்த வாட்ஸ்அப் பக்கத்தில் உள்ளேன்.மிக மிக அற்புதமான செய்திகள் ,முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்கள் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கொரானா காலத்தில் ஒவ்வொரு நாளும் பாதிக்க பட்டவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்கள் இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம் மிக அற்புதமான ஒரு சேவை. உங்கள்  பணி மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் . இந்த திருச்சி விஷன் watsapp பக்கத்தில் நான்  உறுப்பினாரக உள்ளதை நினைத்து நான் மிகவும் பெருமை அடைகிறேன்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி. 

தினேஷ் 

Trichy vision இந்த குழுவில் வரும் அனைத்து செய்திகளும் நம்பத்தகுந்த மற்றும் துல்லியமான வை விரைவு செய்திகளாக வெளிவருகிறதுஇந்த குழு மூலமாக தொலை தூரத்தில் உள்ளவர்களும் நமது மாவட்டத்தில் நடைபெறக்கூடிய அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது வாழ்த்துக்கள் திருச்சி விஷன். 

ரெக்ஸ் பிராங்க்ளின் 

திருச்சி விஷன் எனக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது. 

ஆறுமுகம் 

திருச்சி விஷன் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள். பொருட்கள் விற்பனை இடம் மற்றும் விலை விபரம் குறித்த தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட்டால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும் . 

திருச்சி மாநகராட்சி சார்பாக நடத்தப்படும் நிகழ்வுகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தவும். அது மிக உபயோகமாக இருக்கும். 

சுதாகர்

திருச்சி விஷன் இரண்டு வருடம் கடந்த்தற்கு வாழ்த்துக்கள். 

விஜயசங்கர்

வாழ்த்துக்கள் 

சந்திரசேகரன்

வாழ்த்துக்கள்

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *