திருச்சி மாநகரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை கள் பேருந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பு சாக்கடைகள் தேங்கி துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டது. இதனால் இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை பேருந்து பயணிகள் பயன்படுத்த முடியாமல் சாலையில் நின்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
இந்த நிலை குறித்து கடந்த கடந்த 20.11.2021ஆம் தேதியன்று அந்த பேருந்து நிறுத்த நிழற்குடை பற்றி திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது. இதனை அறிந்த மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரத்தில் பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பு இருந்த சாக்கடையை அகற்றி, சிமெண்ட் தளம் அமைத்து உள்ளனர்.
இந்த மாநகராட்சி நடவடிக்கைக்கு பேருந்துகள் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி விஷன் செய்தி எதிரொலியால் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு பேருந்து பயணிகள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments