திருச்சி மாநகரில் விபத்துக்குள்ளான வாகனங்கள், ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், குற்ற செயல்களில் ஈடுபட்ட வாகனங்கள் என அனைத்தும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தின் மதில் சுவர் அருகே சாலையின் ஓரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கார், ஆட்டோ என மூன்று வாகனங்கள் மீது முட்புதர்கள் நிரம்பி கிடக்கின்றன. தற்பொழுது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் பாதாள சாக்கடை பணியின் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடது, வலது புறம் திரும்புவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் மீது செடி கொடிகள் அடர்ந்து அடைந்து இருப்பதால் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தங்குமிடமாக மாறி உள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் (17.05.2023) திருச்சி விஷன் செய்தி வெளியிட்டது. இன்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது படர்ந்திருந்த செடி கொடிகளை அப்புறப்படுத்தி உள்ளனர். தற்பொழுது வந்த இடம் தூய்மையாக உள்ளது. மேலும் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை மற்றொரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments