ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று திருச்சியில் பல இடங்களில் களைகட்ட தொடங்கியது. தனியார் நிறுவனங்கள், வாகன போக்குவரத்து என அனைத்திற்கும் அலங்காரங்களை இன்றே தொடங்கிவிட்டன.
Advertisement
திருச்சியின் முக்கிய பகுதிகளான காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி, சிந்தாமணி, இ.பி ரோடு, தென்னூர் சாலை ஆகிய பகுதிகளில் மக்கள் பூஜைக்காக தேங்காய் பூ பழங்கள் வாழைக் கன்றுகள் மற்றும் பொரி ஆகியவற்றை வாங்கி செல்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தொடர் விடுமுறை என்பதால் மார்க்கெட் மற்றும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
Advertisement
Comments