திருச்சி மாநகர் உறையூர் ஏயுடி காலனி பகுதியில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக உறையூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள குடோன் அருகே சோதனை மேற்கொண்டதில், விபசாரம் நடப்பது தெரியவந்தது. பின்னர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய முகமதுஅசாருதீன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதில் இளம் பெண்களை மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதும், இதனால் செல்போன் மற்றும் டிவி போன்ற மின்னணு சாதனங்கள் விற்பனை செய்து வரும் கடையை மேம்படுத்தியது தெரியவந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments