தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் திருச்சி மணப்பாறை அருகே அஞ்சல்காரன் பட்டியைச் சேர்ந்த 26 வயதாகும் வில்சன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இவர் வையம்பட்டியில் டீக்கடையில் வடை போடும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த விளையாட்டில் 4 லட்சம் ரூபாயை இழந்ததால் மனமுடைந்த வில்சன் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு உள்ளார்.
இதை கண்ட அவரது வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments