திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் மாமரத்து கொள்ளை பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் ஜெயக்குமார் (26). லால்குடி அருகே குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.
பல்லபுரத்தில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. அப்போது, ஜெயக்குமார் வீட்டில் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். திடீரென வீட்டில் மின்னல் தாக்கியது. இதில் ஜெயக்குமார் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுக்குறித்து தகவலறிந்த லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments