இந்தியா முழுக்க கொரானா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியை பொருத்தவரை ஏழு கிலோலிட்டராக இருந்தது மூன்று மடங்காக உயர்த்தி 21 கிலோலிட்டர் அளவிற்கு ஆக்சிஜன் சேமிப்புக் கலன்கள் இருப்பதாக மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்கடர்.வனிதா அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தினசரி 2.8 கிலோலிட்டர் அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
ஆக்ஸிஜன் சேமிப்பு அலகுகள் தவிர, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் உள்ளன. 50 டி வகை சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் 0.6 கிலோ லிட்டர் திறன் கொண்டது, மொத்தம் 30 கிலோலிட்டர் திறன் கொண்டது. எந்தவொரு அவசர காலத்திலும், திரவ ஆக்ஸிஜன் வெளியேறினால், இந்த சிலிண்டர்களைப் பயன்படுத்தலாம் மருத்துவமனையில்
ஆக்சிஜன் ஆதரவில் தற்போது 150 நோயாளிகள் உள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தேவையான அளவு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. திருச்சி வேலன் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் ராஜவேலு கண்ணையன் கூறுகையில் ,
மருத்துவர் ராஜவேலு கண்ணையன்
திருச்சியை பொருத்தவரை அதிக அளவில் தொழிற்சாலைகள் இருப்பதால் அங்கிருந்து நமக்கு தேவையான அளவு ஆக்சிஜன் பெறப்படுகிறது.
எனவே பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணிகள் மிக மிக குறைவு.
அதுமட்டுமின்றி, திருச்சி பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதால் நம்மால் திருச்சியில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க இயலும்.
அதேசமயம் தொற்று அதிகளவு ஏற்படாமலிருக்க மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.
முகக்கவசம் அணிதல்,
சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் அப்படி இல்லை எனில் திருச்சியும் அதிகம் தொற்றுபாதித்தவர்களின் எண்ணிக்கையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments