Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் –  கு.ப. கிருஷ்ணன் வாக்குறுதி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் கடும் வெயிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.நேற்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர், பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது முதலில் கீரிக்கல்மேடு  பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி போதாவூர் சென்றபோது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன்  வரவேற்றனர் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகள் சேகரித்தார்.  

அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  சென்றபோது  அந்த வழியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைக்க கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை  பூ உற்பத்தியைப் பெருக்கவதற்கு வெப்பமூட்டி குடில் அமைத்து தரப்படும்.

மேலும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி,உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று,
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  1500 வங்கி கணக்கில் செலுத்துவோம்,வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மேலும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாய் உயர்தியது என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ்,முத்துகருப்பண், மற்றும் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உடனிந்தனர் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *