தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி குட்செட்டில் லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக 200க்கும் மேற்பட்ட லாரிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.
அதேநேரம் இன்றைய தினம் கொண்டு செல்லப்பட உள்ள இரும்புகளும் தேக்கமடைந்து உள்ளது. ஏற்கனவே நோட்டீஸ் விடுத்ததன் காரணமாக இன்றையதினம் வரவேண்டிய அரிசி மற்றும் உரங்கள் நாளை இறக்குமதி செய்யப்பட உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் லாரி தொழிலை நசுக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வந்தால் 1ம் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments