திருவெறும்பூர் அருகே பெல் செக்ருட்டி எஸ் ஐ மனைவியிடம் ரூ30 லட்சம் பணம் 15 பவுன் நகையை இரட்டிப்பு ஆக்கி தருவதாக அதிமுக கலை பிரிவு மாவட்ட செயலாளர் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகி ஆகியோர் வாங்கி ஏமாற்றியதோடு அந்தப் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரையும் துவாக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை முல்லை வாசல் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் செக்யூரிட்டி எஸ் ஐ யாக இருந்த பொழுது கடந்த 2017 ஆம் ஆண்டு இறந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ரேகா (38) என்ற மனைவி உள்ளார். செல்வகுமார் இறந்த பொழுது ரேகாவிற்கு வந்த பணத்தை வாழவந்தான் கோட்டை பழைய பர்மா காலனி சேர்ந்த பாண்டி ராமன் மகன் எம் பி ராஜா (39) இவர் அதிமுக கட்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கலை பிரிவு செயலாளராக உள்ளார். இவரது நண்பர் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பெல் நகரை சேர்ந்த கோபால் மகன் சமுத்திர பிரகாஷ் (39) இவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.இவர்கள் இருவரும் ரேகாவிடம் செல்வகுமார் இறப்பிற்கு வந்த பணம் ரூ30 லட்சம் பணத்தை இரட்டைப் பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வாங்கியதோடு மேலும் 15 பவுன் நகையும் வாங்கி உள்ளனர்.
ஆனால் அந்த பணத்தையும் நகையையும் திரும்ப கொடுக்கவில்லை ரேகா பலமுறை கேட்டும் கொடுக்காமல் ஏமாற்றியதோடு ரேகாவை தரம் தாழ்த்தி இழிவாக பேசி வந்ததாகவும் இந்த நிலையில் நேற்று ரேக்கா நடந்து வந்து கொண்டிருந்தபோது வழி மறித்து பணமா கேக்கிறாய் தர முடியாது என கூறி ரேகாவை தாக்கியதோடு அருகில் கடந்த கட்டையை தூக்கிக் கொண்டு வந்து உன்னை கட்டையில் அடித்துக் கொன்று விடுவோம் என ராஜாவும் ,சமுத்திர பிரகாசம் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக ரேகா துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு ராஜா மற்றும் சமுத்திர பிரகாஷ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ராஜா மற்றும் சமுத்திர பிரகாஷ் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே ரவுடி வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments