திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அட்சயா ரைஸ்மில் எதிரில் உள்ள சதீஷ் டிபன் சென்டர் நடத்தி வரும் சதீஷ் (42 ) என்பவர் நடத்தி வருவதாகவும் இந்நிலையில் கடந்த (9.03 2025)ஆம் தேதி காலை 7 மணி அளவில் சதீஷ் கடையில் இருந்தபோது TN 28AY7951 பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இரு
நபர்கள் கடை உரிமையாளர் சதீஷ் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பறித்து சென்றுள்ளனர்.இது சம்பந்தமாக மணிகண்டம் காவல் நிலைய குற்ற எண் 26/25 U/s 296 (b)309(4)311BNS இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வழக்கின் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சதீஷ்குமார் (33) காரைக்காடு
மணப்பாறை மற்றும் இளையராஜா( 27 ) சிந்தாமணிப்பட்டி கடவூர் ஆகிய ஆகியோர் (9.03.2025)ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் சதீஷ்குமார் மற்றும் இளையராஜா மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வ நாகரத்தினம் அவர் பரிந்துரைத்ததன் பேரில்
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சதீஷ்குமார் என்பவர் மீது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று (26 /03/2025) ஆம் தேதி சிறையில் உள்ளவர்களிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்து கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments