நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாகும். இங்கு கொல்லிமலையில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் தங்களது விளைநிலங்களில் விளையும் பொருட்களை கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் கொண்டு வந்து சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்கள் சென்று வர கொல்லிமலையில் இருந்து புளியஞ்சோலைக்கு ஒத்தையடி பாதை உள்ளது. இந்த நிலையில் இரவு வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒத்தையடி பாதையில் நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் சென்று கொண்டிருந்தபோது அவர்களை பிடித்து விசாரித்தனர்.
போது கொல்லிமலை தேவனூர் நாடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (40) என்பதும், மற்றொருவர் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (43) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து அனுமதியின்றி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகள்
அவர்கள் வேட்டையாடிய ஒரு முயல் இரண்டு சுடுவதற்கு பயன்படுத்தக்கூடிய பால்ரஸ் குண்டுகள் மற்றும் தலைக்கவச விளக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments