திருச்சி மாவட்டம், மணப்பாறை சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் மணப்பாறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மொபைல் போன் மூலம் லாட்டரி சீட்டு கேட்பவர்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று லாட்டரி சீட்டுகள் விற்பணை செய்த காமராஜ்நகரைச் சேர்ந்த சங்கர் (54) மற்றும் கோவிந்சாமி தெருவைச் தேருவைச் சேர்ந்த ராமமூர்த்தி (59) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.1580 பணம், 3 மொபைல் போனகள், 2 இருசக்கர வாகனங்கள், ஒரு மடிக்கணினி மற்றும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments