ஒரிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேரை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒரிசாவில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் பாஸ்சை மறித்து சோதனை செய்தபோது பஸ்ஸில் 2 பேக் மற்றும் ஒரு சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் பிரபல கஞ்சா வியாபாரியான திருச்சி ராம்ஜி நகர் மலைப்பட்டி முருகன் என்ற பரிசீலி முருகன் மகன் சக்திவேல், பட்டுக்கோட்டை சேர்ந்த சுலைமான் மகன் அப்துல் பாசித் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.பின்னர் அவர்களிடமிருந்து கஞ்சா சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில் மேலும் முக்கிய புள்ளிகளுக்கு இந்த கஞ்சா கடத்தலில் தொடர் இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் அதனால் இந்த கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்களையும் கைது செய்வதற்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments