திருச்சி மாவட்டம்,மணப்பாறை அடுத்த வைரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கோயமுத்தூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுதா. கடந்த ஏழு வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் (கடந்த நான்கு நாட்களுக்கு முன் மனைவியையும், மகன்களையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இவருடைய மகன்கள் லோகநாதன் வயது 12, தருண் ஸ்ரீ 7 என்ற சிறுவன் , இவர்கள் இங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இன்று காலையில் இயற்கை உபாதைக்காக புதுக்கோட்டை மாவட்டம் ஒலியமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள வெத்தலாங் குளத்திற்கு சென்ற சிறுவர்கள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் பெற்றோர்கள் குழந்தைகளை தேடிய நிலையில் மதியம் ஒரு மணி அளவில் குளத்தின் அருகே அவரது உடைகள் கிடப்பதைக் கண்டு சந்தேகத்தின் பேரில் குளத்தில் தேடி பார்த்த போது 2 சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments