ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளின் பட்டியல் EDUCATION WORLD MAGAZINE வெளியிடுகின்றனர். 2021ஆம் ஆண்டின் சிறந்த தன்னாட்சி கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தேசிய அளவில் திருச்சியிலிருந்து இரண்டு கல்லூரிகள் முதல் முப்பது இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. தேசிய அளவில் 15வது இடத்தை புனித வளனார் கல்லூரி தன்னாட்ச்சி (St Joseph college autonomous ) மற்றும் 24 வது இடத்தை திருச்சி தேசிய கல்லூரி பெற்றுள்ளன. இந்த பட்டியல் மாநில அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
4-வது இடத்தைத் புனித வளனார் கல்லூரி திருச்சி, தேசிய கல்லூரி 9வது இடத்தையும் பெற்றுள்ளன. டெல்லியை தலைமையிடமாக கொண்ட முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சியின்(C fore ) என்ற அமைப்பு சில நிர்ணயிக்கப்பட்ட தரவரிசை அடிப்படையில் சிறந்த பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள், தனியார் தன்னாட்சிக் கல்லூரிகள் அரசு தன்னாட்சிக் கல்லூரிகள் போன்றவற்றில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பெயரை பட்டியலிடப்படுகின்றன.
அவற்றில் மிக முக்கியமாக மதிப்பிடப்படும் பிரிவுகள் கல்லூரி வளாகத்தின் அமைப்பு, ஆசிரியர்களின் தரம், கற்பித்தல் முறை, பாடப்பிரிவுகள், மாணவர்களின் பங்களிப்பு, விளையாட்டு மற்றும் கல்வி, கல்லூரியில் மாணவர்களின் செயல்பாடுகள், வேலை வாய்ப்பில் கல்லூரியின் சிறப்பு மற்றும் பொதுமக்களிடம் கல்லூரிக்கு இருக்கும் மதிப்பு இவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படும் மதிப்பெண்கள் மூலம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டு திருச்சியில் இருந்து இரண்டு கல்லூரிகள் முதல் 30 இடங்களுக்குள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருச்சி ஜோசப் கல்லூரியின் இணைப்பேராசிரியர் ரோஸ்வெனிஸ் குறிப்பிடும்பொழுது, ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியின் தர சான்றிதழுக்காக அறிக்கைகள் NAAC மற்றும் NIRF க்கு அனுப்பப்படும். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை பரிசோதித்து. பின்னர் மக்களிடையே கல்லூரி பற்றிய தகவல்களையும், கருத்துகளையும் கேட்டுக்கொண்டும் .
கல்லூரி மக்களுக்கு எந்தெந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. மாணவர்களின் நலனை எவ்வளவு முக்கிய பங்கு அளிக்கிறது என்ற வரிசையில் கல்லூரிக்கு இது போன்று ஆண்டுதோறும் சிறந்த கல்லூரிகளின் பெயர்கள் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் தேசிய அளவில் 15 வது இடத்தையும், மாநில அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
அனைத்திற்கும் காரணம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு அவர்களின் ஒத்துழைப்பு கல்லூரியை மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்கிறார்.
இதைப்போன்று பட்டியலில் மாநில அளவில் 9வது இடத்தையும், தேசிய அளவில் 24 இடத்தையும் பிடித்து தேசிய கல்லூரியின் பேராசிரியர் பிரசன்னா பாலாஜி கூறுகையில் கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்பே இதற்கு மிக முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
Comments