100வது நாளாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் புதிய வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 100−வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்திற்குள் நுழைந்த அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மனித எலும்புகளை பிரதமருக்கு அனுப்பி வைக்கப் போவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணமாக அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரண்டு விவசாயிகள் கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் கோசல்ராம் காலில் விழுந்தார்கள் . ஒரு விவசாயி காவல் ஆய்வாளர் காலில் விழுந்தபோது அவர் பின்னோக்கி சென்றார். இன்னொரு விவசாயி காவல் உதவி ஆணையர் மணிகண்டன் காலை பிடித்து கொண்டு சிறிது நேரம் தரையில் படுத்து இருந்தார்.போலீஸ்சார் அவரை எழுப்ப முயன்றனர் ஆனால் உதவி ஆணையர் அசராமல் அதே இடத்தில் நின்றார்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பிஎஸ்என்எல் அலுவலகம் மூடப்பட்டது. பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments